சமீபத்தில் ஸ்டேன்ஃபோர்டு (STANFORD) பல்கலைக்கழகம் வெளியிட்ட உலகின் டாப் 2% விஞ்ஞானிகள் பட்டியலில் கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 6 பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முனைவர் ஏ.கே.பிரியா (சுற்றுச்சூழல் அறிவியல்), முனைவர் டி.விக்னேஸ்வரன் (வலையமைப்பு & தொலைத்தொடர்பு), முனைவர் ஏ.கார்த்திக் (ஆற்றல்), முனைவர் பி.மனோஜ் குமார் (மெட்டீரியல்ஸ்), முனைவர் இ.ரஞ்சித் குமார் (பயன்பாட்டு இயற்பியல்) மற்றும் முனைவர் டி.பாலாஜி (பாலிமர்ஸ்) இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் த.சரவணன் அவர்கள் பேசுகையில்; உலகளாவிய சவால்களை சமாளிக்கும் ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் கேபிஆர் பொறியியல் கல்லூரியின் பொறுப்பை இந்த பட்டியல் அங்கீகரிக்கிறது என்று கூறி பேராசிரியர்களை வாழ்த்தினார்.

இந்தியா முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் விஞ்ஞானிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.