கோவை, கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பல்வேறு பன்னாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நடப்பு கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் அஸ்மிதா, கோபிகா, கீர்த்திகா மற்றும் மாணவர் பிரணவ் தர்ஷன் ஆகியோர் தைவான் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களாக விளங்கும் தேசிய மத்திய பல்கலைக்கழகம் தைவான், தேசிய சன் யாட் சென்  பல்கலைக்கழகம் தைவான் மற்றும்  தேசிய சாங்குவா கல்வி பல்கலைக்கழகம் தைவான், ஆகிய கல்வி நிறுவனங்களில் உதவி தொகையுடன் கூடிய இன்டெர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்காக செல்கின்றனர்.