பிரபல இணையவழி மெசேஜ்  செயலியான வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி விரைவில் அணைத்து உபயோகிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. 


இதற்கான சோதனை தற்போது பீட்டா சோதனைக்கு ஒப்புதல் தந்துள்ள உபயோகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒரு மெசேஜ் அனுப்பி 15 நிமிடம் வரை அந்த மெசேஜை எடிட் செய்ய வசதி பீட்டா சோதனைக்கு ஒப்புதல் தந்துள்ள உபயோகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த அம்சம் ஆப்பிள், ஆண்ட்ராய்டு மற்றும் கணினி மூலம் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோருக்கு வழங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.