வார வாரம் ஓ.டி.டி தளங்களில் புது திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடித்த திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களில் சில வெளிவரும். 

 

அதன்படி இந்த வாரம் வெளியாகியுள்ள தமிழ் படங்கள்:

 

இன்று இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்துள்ள 'காரி' திரைப்படம் 'ஜீ5' ஓடிடி தளத்தில் வந்துள்ளது. 

 

இந்த வாரம் வெளியாகியுள்ள பிற மொழி படங்கள்:

 

மலையாளத்தில் அமலாபால் நடித்த தி டீச்சர் (The Teacher) திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே (Jaya Jaya Jaya Jaya Hey) திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும் ரிலீசாகி உள்ளது.

 

தெலுங்கில் மசூடா (Masooda) திரைப்படம் ஆஹா ஓடிடியிலும், இட்லு மாரேடுமில்லி பிரஜானிகம் (Itlu Maredumilli Prajaneekam) படம் ஜீ5 ஓடிடி தளத்திலும் ரிலீசாகி உள்ளது. 

 

இந்தியில் தாரா வெர்சஸ் பிலால் (Tara Vs Bilal) படம் நெட்பிளிக்ஸிலும், ஆங்கிலத்தில் டாப் கன் மேவ்ரிக் (TopGun Maverick) திரைப்படம் அமேசான் பிரைமிலும், கிளாஸ் ஆனியன் (Glass Onion) திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ரிலீசாகி உள்ளன.