கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த தகவல் ...
- by David
- May 27,2025
Coimbatore
இன்று (27.5.2025) கோவை சரவணம்பட்டி பகுதியில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது - சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி) லட்சுமி நகர் நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட் - ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த மின்தடை இன்று ரத்து செய்யப்படுவதாக கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வரக்கூடிய வேறு ஒரு நாளில் மின் தடை அமல்படுத்தப்படும்.