கோவை விமான நிலையம் வழங்கும் சேவைகளுக்கு சர்வதேச அளவில் 81 இடம்!
- by David
- Apr 06,2025
சர்வதேச விமான நிலையங்களின் கவுன்சில் நடத்திய 2024க்கான விமான நிலைய சேவை தர மதிப்பீட்டில் கோவை விமான நிலையம் உலக அளவில் 81 வது இடத்தையும், இந்திய விமான நிலைய ஆணையம் நிர்வாகிக்கும் 14 விமான நிலையங்களில் 11 வது இடத்தையும் பிடித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
விமான பயணிகள் ஒரு விமான நிலையத்தில் வழங்கப்படும் சேவைகளால் எந்த அளவு திருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை மையமாக வைத்து நடந்த இந்த ஆய்வில், இந்திய விமான நிலைய ஆணையம் நிர்வாகிக்கும் விமான நிலையங்களில் முதல் இடத்தை கோவா விமான நிலையமும் இரண்டாவது இடத்தை சென்னையும் அதற்கு அடுத்த இடத்தை திருச்சி விமான நிலையமும் பெற்றுள்ளன.
உலக அளவில் கோவா விமான நிலையம் 62வது இடத்திலும், சென்னை 63வது இடத்திலும் திருச்சி 64வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2023 இல் உலகளவில் 145 ஆவது இடத்திலிருந்து கோவை விமான நிலையம் சமீபத்தில் வெளியான தரவரிசைப்படி சென்ற ஆண்டில் 81வது இடத்தை பிடித்து முன்னேறி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.