ஏப்ரல் 26ல் கோவை வருகிறாரா 'ஜனநாயகன்' ?
- by David
- Apr 17,2025
Coimbatore
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகம் தயாராகி வருகிறது. இந்த கட்சிக்கு அண்மையில் 120 மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்தார். இவர்கள் மூலமாக தமிழகம் முழுக்க உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற 60,000 பூத் ஏஜென்ட் நியமிக்க பணிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் மண்டலம் வாரியாக பூத் ஏஜெண்டுகள் மாநாடு நடத்த தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டுள்ளதாகவும், கட்சியின் முதல் பூத் கமிட்டி மாநாடு மேற்கு மண்டல மாவட்டங்களை ஒருங்கிணைத்து, கோவையில் ஏப்ரல் 26 அல்லது 27ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் இந்த மாநாடு சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. கட்சியின் முதல் பூத் ஏஜென்ட் மாநாடு இது என்பதால் கட்சி தலைவர் விஜய் இது கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.