ஏப்ரல் 8ம் தேதி கோவை - சென்னை வழியே இயங்கும் வந்தே பாரத் விரைவு ரயில் அறிமுகமாக உள்ளது. இந்த ரயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னையிலிருந்து கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். 

 

இது இந்தியாவின் 10 வது வந்தே பாரத் ரயில் ஆகும். இதில் 16 ரயில் பெட்டிகள் இடம் பெறுகிறது. பொதுமக்களுக்கு எப்போதிருந்து இந்த ரயிலின் சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்ற தகவல் விரைவில் தெரிவிக்கப்படவுள்ளது.


இந்தியாவில் தற்போது உள்ள புது ரக 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில்கள் உலக தரம் கொண்டவை. கிட்டத்தட்ட புல்லட் ரயில் போலவே பார்ப்பதற்கு இருக்கும் இந்த ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. 


இந்த ரயில்களில் தானியங்கி கதவுகள் இருப்பதால் பயணிகள் ரயில் நின்ற பிறகே ஏறவும் இறங்கவும் முடியும். 


முழுக்க முழுக்க AC வசதி செய்யப்பட்டுள்ள இந்த ரயிலில் பயணிப்போர் சௌகரியத்துக்காக சாய்ந்து அமரும் ரிக்லைனர் சீட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து கோச்சுகளிலும் ஜி.பி.எஸ் அடிப்படையிலான ஆடியோ-விஷுவல் தகவல் அம்சம் இடம்பெறும். பொழுதுபோக்கு தேவைகளுக்காக வை-பை (Wi-Fi) வழங்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு சீட்டிலும் ஒளி வசதிகள் அமருபவரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.ஒவ்வொரு கோச்சுகளிலும் சூடான  உணவுகள்  உள்ள 'பேன்ட்ரி' வசதிகள் உள்ளது. இங்கு உணவுடன், சூடான, குளிரான பானங்களும் கிடைக்கும்.  


இந்த ரயிலில் உள்ள கழிவறைகள் பயோ- வேக்கியூம் வகையில் செயல்படும். மாற்றுத்திறனாளிகளுக்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கழிவறைகளும் இடம்பெறும். 


அதிநவீன பிரேக் சிஸ்டம் கொண்ட இந்த ரயில் மிக பாதுகாப்பான முறையில் வேகத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை. 


2019ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயில் கொரோனா கட்டுப்பாடு காலத்தால் பெருமளவு உற்பத்தி செய்யப்படவில்லை. அண்மையில் கிடைத்துள்ள தகவல் படி 2023ல் 75 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கிடவேண்டும் என்று இந்திய அரசு சமந்த பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.