இன்று மதியம் அன்னூர் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து LGB பகுதியை  கடக்கும்போது சாலையின் இடது புறமாக இருந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து பேருந்தின் மீது விழுந்தது.

மரம் விழுவதை கணித்த ஓட்டுனர் தர்மராஜ் சுதாரித்துக் கொண்டு பேருந்தை இயக்காமல் நிறுத்தியதால் பேருந்தில் பயணம் செய்த சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயம் இன்றி உயிர் தப்பினர்.

சம்பவத்தால் கோவை சக்தி செல்லும் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.