Important Update: பொங்கல் விடுமுறையின் நீட்டிப்பாக ஜனவரி 18ஆம் தேதி - புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.


தமிழ்நாடு அரசு தரப்பில் வரும் 17ம் தேதி வரை பள்ளிக் கல்லுாரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது விடுமுறை நீட்டிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

 

ஜனவரி 15ம் தேதி முதல் துவக்கிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை தொடர்ந்து ஜன. 16 மாட்டுப் பொங்கல் மற்றும் 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. 

 

இதனால் ஜனவரி 17ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு 18ம் தேதி பள்ளி கல்லுாரிகள் திறக்கப்பட இருந்தன.

 

இதற்கிடையே அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என்று அனைவருக்கும் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

 

இதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து உள்ளது.

 

தகவல்: சமயம்