கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மொத்தம் 5,46,611 சொத்து வரிதாரர்கள் இருக்கின்றனர்.

 

பொதுவாக சொத்து வரி செலுத்துவதில் மக்கள் தாமதம் காட்டிவருவது அதிகமாக இருப்பதால் வரி செலுத்துவதை எளிமையாக்க மாநகராட்சி சார்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

 

அதன் ஒரு பகுதியாக சொத்து வரியை இருந்த இடத்திலேயே UPI வழியே விரைவாக செலுத்த கோவை மாநகராட்சி முயற்சி எடுத்து வருகிறது. 

 

நடப்பு நிதி ஆண்டு முடிவடைவதற்குள் இந்த கட்டண வழிமுறை கொண்டுவரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.