கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் இன்று  உயிரிந்துள்ளர்.

அந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் சிக்குவதற்கு முன்னர் அந்த இளைஞர் ஒரு பேருந்தை பிடிக்க, இன்று காலை பேருந்து நிலையத்தின் இடது புறம் இருந்து, இரண்டு பேருந்துகளுக்கு இடையே புகுந்து, வலதுபுறம் செல்ல முயற்சித்தார்.

இதனை அறியாத முன்னால் இருந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை பின்னோக்கி இயக்க, இரு பேருந்துகளின் இடையே அந்த நபர் சிக்கி பலியானார்.