கோவை மாநகர், புறநகரில் பெண்கள் மீதான தாக்குதல், வன்முறை புகார்கள் அதிகமாகி விட்டது. தினமும் 4 முதல் 7 வழக்குகள் பதிவாகி வருகிறது.

குடும்பத்தினர் மட்டுமின்றி அக்கம், பக்கத்தினர் பெண்களிடம் தகராறு செய்வது, தாக்குதல் நடத்துவதாகவும் புகார்கள் குவிந்து வருகிறது. இடம், சொத்து பிரச்னை தொடர்பாகவும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிகிறது.

நகரில் மாதம் சுமார் மாதம் 50 புகார்களும், புறநகரில் 40 புகார்களும் குவிகிறது. பெண்களை தாக்கும் நபர்கள் மீது பெண்கள் வன் கொடுமை சட்டம், மிரட்டுதல் வழக்குகளில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,‘‘பொது இடங்களில் பெண்களிடம் தகராறு செய்வது, அத்துமீறி நடப்பது போன்ற செயல்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்களிடம் தகாத முறையில் பேசுவது கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு பிரச்னை தொடர்பாக பெண்கள் புகார் அளிக்க வந்தால் பிரச்னைகள் குறித்து விசாரிக்கிறோம். பின்னர், வழக்கு பதிவு செய்கிறோம்’’ என்றனர்.