கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின் படி கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 500 மரக்கன்றுகளை நடும் மரம் விழா நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை ஆணையர் சரவணன் ஆகிய கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுவதை துவங்கி வைத்தனர்.

ஆயுதப்படை கவாத்து மைதானம் வளாகத்தில் 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் கையில் மரக்கன்றுகள் ஏந்தி மரம் வளர்ப்போம்,மழை பெறுவோம் என காவல் ஆணையர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் அங்கிருந்த காவலர்கள் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,துணை ஆணையர் சரவணன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோருடன் 500 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆயுதப்படை மைதானம் வளாகத்தில் மரங்களை நட்டு வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்; தற்போது 1200 மரங்கள் காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ளது  கடந்த வருடம் 1500 மரங்கள் நட்டு  வைத்தோம் இங்கு மியாவாக்கி உருவாக்கி உள்ளோம். தற்போது அந்த மரங்கள் நன்றாக வளர்ந்து உள்ளது இதனைத் தவிர 15000 மரங்கள் நாம் நட வேண்டும். 500 மரங்களை நாம் நடப்போகிறோம் அந்த மரங்களை அவ்வப்போது காவலர்கள்  பார்த்து அதனை பராமரிக்க வேண்டும் என் தெரிவித்தார்.