கோடை விடுமுறை நாட்களில் அரசு தரப்பில் நடத்தப்படும் பொழுதுபோக்கு நிகழ்வான அரசு பொருட்காட்சி கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நாளை (1.5.25) துவங்க உள்ளது.

நாளை முதல் அடுத்த 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறும். இந்த நிகழ்வை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார். இதில் 30க்கும் மேற்பட்ட அரசுத்துறை அரங்குகள், 20க்கும் மேற்பட்ட தனியார் அரங்குகள், கோவை மக்களை மகிழ்விக்க குளிரூட்டும் ஸ்நோ வேர்ல்ட் போன்ற விதவிதமான விளையாட்டுகள், சுவைத்திட விதவிதமான உணவு வகைகள் என அனைத்தும் இடம்பெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தினமும் பொருட்காட்சி நடைபெறும்.

முன்னதாக ஏப்ரல் 27ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மே 1ம் தேதி பொருட்காட்சி நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.