நாடும் முழுவதும் நாளை (9.7.25) மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக பல்வேறு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாட்டின் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. அதே சமயம் மக்களை பாதிக்காத வகையில், போக்குவரத்து சேவை உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக   கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமை செயலர் எச்சரித்துள்ளார். மீறி ஈடுபட்டால் சம்பள நிறுத்தம், துறைரீதியான நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த சேவைகள் எல்லாம் பாதிக்கபட வாய்ப்பு உள்ளது?

வங்கி சேவை 
தபால் சேவை 
பொது துறை/அரசு துறை
போக்குவரத்து

எதெல்லாம் பாதிக்கப்படாது?

பள்ளி & கல்லூரிகள் 
தனியார் நிறுவனங்கள் 
மருத்துவம்