டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் 22வது பட்டமளிப்பு விழா
- by David
- Aug 04,2025
பொள்ளாச்சி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் 22ஆவது பட்டமளிப்பு விழா, சமீபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இக்கல்லூரியின் தலைவர் எம். மாணிக்கம் விழாவை தொடங்கி வைத்து பட்டதாரிகளின் சாதனைகளைப் பாராட்டினார்.
கல்லூரியின் முதல்வர் பி.கோவிந்தசாமி, விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று, கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்புகள் அடங்கிய சுருக்கமான கல்வி அறிக்கையை சமர்ப்பித்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக சென்னை இன்ஃபைனைட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் (மனிதவளம்) ஷோபா சுரேஷ் நிதின் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்து வருவதை எடுத்துரைத்த அவர், செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கம்ப்யூட்டிங், பிளாக்செயின், சைபர் பாதுகாப்பு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்கள் L2 துறைகளை மாற்றிவருவதை வலியுறுத்தினார். பட்டதாரிகள் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க, வாழ்நாள் முழுவதும் கற்றல், தன்னிலைபற்று மற்றும் தொடர்ந்த திறன்வளர்ச்சி ஆகியவற்றை அணுக வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
அதன் பின், 716 பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 11 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள், 14 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். 351 மாணவர்கள் First Class with Distinction பெற்றனர் மற்றும் 349 மாணவர்கள் First Class பெற்றனர்.
கல்லூரியின் தாளாளர் ஹரிஹரசுதன் அவர்கள் மாணவர்களை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார். விழாவில், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சுப்ரமணியன்.வி.எஸ்.,கல்லூரியின் துணை முதல்வர், A.செந்தில்குமார், இன்ஃபினைட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் வளாக மனிதவளத் தலைவர் திரு.சுந்தர், சென்னை எச்.சி.எல் டெக்னாலஜிஸின் பொறியியல் & ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவைகள் குழு தொழில்நுட்ப மேலாளர் டாக்டர்.பி.இளங்கோ, கல்லூரியின் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.