கோவையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, பவானி ஆற்றை நீராதாரமாக கொண்டு செயல்படுத்தப்படும்  ரூ. 780 கோடி மதிப்பிலான பில்லூர் 3 ஆவது கூட்டுகுடிநீர் திட்டதை துவக்கி வைத்தார்.

மேலும் அவர் ரூ. 362.20 கோடி மதிப்பில், கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த அன்னூர், சூலூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்திட்டப் பணிகளையும் துவக்கி வைத்து, சுமார் 8000 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 "மாதம் ஒரு முறை நான் கோவை மாநகரத்திற்கு வருகிறேன். நன் அடிக்கடி வரும் ஊர் இது. இங்கு கலைஞர் வளந்துள்ளார். எனவே எனக்கு இங்கு வந்து மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி," என்றார் அமைச்சர் உதயநிதி.

"கடந்த தேர்தலின் பொழுது திமுக தலைவர், கோவை மக்களுக்கு ஒரு முக்கிய வாக்குறுதியை வழங்கினார். கோவை மாநகர் முழுவதும் தங்கு தடை இன்றி குடிநீர் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். இப்போது அந்த வாக்குறுதி உங்களுக்கு நிறைவேற்றி தரப்பட்டுள்ளது," என அமைச்சர் உதயநிதி கூறினார்.

பில்லூர் 3 ஆம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக, இனி கோவை மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும், என உறுதியாக கூறினார்.