கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களை 10 பேருந்துகள், 5 லாரிகளில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்களுடன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மேலும் கூறுகையில்:- 

மீட்புப்பணிக்காக முதற்கட்டமாக கோவை மாநகராட்சி பணியாளர்கள் 400 பேரை அனுப்புகிறோம். அவர்களுடன் 20 சூப்பர்வைசர்களும் 10  பஸ் மற்றும் 5 லாரிகளில் செல்கின்றனர். 

மீட்பு பணிசெய்ய தேவையான பவர் சா மிஷின் போன்ற உபகரங்களை சேர்த்து அனுப்பி வைக்கிறோம். 50 மூட்டை பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு மூட்டை, அவர்களுக்கு தேவையான தலையணை, போர்வை, பாய், அவர்களுக்கு கைசெலவுக்கு தேவையான பணம் எல்லாம் கொடுத்து உள்ளோம். அவர்கள் முதலில்  காஞ்சிபுரத்தில் ரிப்போர்ட் செய்து அங்கிருந்து பிரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சிக்கு செல்வார்கள்.
முழு வீச்சில் முதற்கட்டமாக 400 பேரை அனுப்பி வைத்திருக்கிறோம். எல்லா கார்ப்பரேஷன் சார்பிலும் ஆட்கள் கேட்கப்பட்டிருக்கிறார்கள், இதில் நம்முடைய கார்ப்பரேஷன் சார்பில் முதலில் நாம் அனுப்பி வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.