மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. 

 

இதையடுத்து நேற்று நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். அதையடுத்து இன்று கேபினட் அமைச்சர்களுக்கு என்னென்ன இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என விவரங்கள் வெளிவந்துள்ளது.

 

அதன்படி அமைச்சரவை விவரங்கள்:- 

▪️ ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு

▪️ அமித்ஷா - உள்துறை

▪️ ஜே.பி.நட்டா - சுகாதாரம், ரசாயனங்கள்

▪️ சிவ்ராஜ் சிங் சவுஹான் - வேளாண், ஊரக வளர்ச்சி

▪️ மனோகர் லால் கட்டார் - மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி

▪️ நிர்மலா சீதாராமன் - நிதி

▪️ ஜெய்ஷங்கர் - வெளியுறவு

▪️ அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி

▪️ மன்சுக் மாண்ட்வியா - தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு

▪️ ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

▪️ ஜித்தன் ராம் மஞ்சி - சிறு குறு நடுத்தர தொழில்கள்

▪️ தர்மேந்திர பிரதான் - கல்வி

▪️ குமாரசாமி - இரும்பு, கனரக தொழில்கள்

▪️ ராம்மோகன் ராயுடு - விமான போக்குவரத்து

▪️ பியூஷ் கோயல் - வணிகம் மற்றும் தொழில்துறை

▪️ ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்

▪️ சர்பானந்த சோனோவால் - கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்

▪️ வீரேந்திர குமார் - சமூக நீதி

▪️ அன்னபூர்ண தேவி - மகளிர், குழந்தைகள் மேம்பாடு

▪️ கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்

▪️ சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி

▪️ ப்ரகலாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

▪️ கிரிராஜ் சிங் - ஜவுளி

▪️ ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நல விவகாரம்

▪️ ஜோதிர்த்தியா சிந்தியா - கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்

▪️ பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம்

▪️ கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

▪️ கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்

▪️ சிராஜ் பஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில்கள்