நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் மத்திய ரிசர்வ் போலீசார் தீவிர வாகன சோதனை... நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த வாரம் மத்திய ரிசர்வ் போலீசார் கேரளாவில் இருந்து கோவை வந்துள்ளனர். கோவை மாநகரில் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவை மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலிசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்திற்கு கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.