பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வரும் 10 ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிக்க தமிழகம் வரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பிரதமர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.

வரும் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தொகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.