தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பொது தேர்வு நடைபெற்றதாலும், கோடை காலம் நிலவியதாலும் மாதாந்திர பராமரிப்புக்காக துணை மின் நிலையங்களில் நடைபெறும் மின் தடை நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் தேர்வுகள் முடிவுற்று முடிவுகள் வந்ததாலும், கோடையும் முடிவு பெற்று பருவமழை துவங்க உள்ளதால், இனி மீண்டும் மாநிலத்தில் பராமரிப்புக்காக மின்தடை ஏற்படும்.
அதன் படி நாளை (6.6.24) வியாழன் கோவை மாவட்டத்தில் 2 துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த துணை மின் நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
சரவணம்பட்டி துணை மின் நிலையம் :
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி) லட்சுமி நகர் நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட்.
மதுக்கரை துணை மின் நிலையம் :
க.க. சாவடி, பாலத்துறை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர் நகர், சுகுணாபுரம், பி.கே. புதூர், மதுக்கரை,அறிவொளி நகர், கோவைபுதூர்( ஒரு பகுதி)
மாதாந்திர மின் தடை கோவையில் நாளை முதல் ஆரம்பம்! நாளை எங்கெல்லாம்? இதோ தகவல்
- by David
- Jun 05,2024