கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவனுக்கு ராகிங் கொடுமை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூலூரில் செயல்படும் பிரபல பொறியியல் கல்லூரியில் சேலத்தை சேர்ந்த மாணவர் 2ம் ஆண்டு 'மெக்காட்ரானிக்ஸ்' பயின்று வருகிறார். அதே துறையயை சேர்ந்த 4ம் ஆண்டு மாணவர்கள் 2 பேர் அந்த மாணவனிடம் அவர் காலையில் கல்லூரிக்கு வருகிறபோது உடை எப்படி உள்ளதோ அதே போல மாலையில் செல்லும் போதும் இருக்கவேண்டும், கைகளில் காப்பு அணியக்கூடாது, சீனியர் மாணவர்களை பார்த்தால் வணக்கம் கூறவேண்டும் என கூறி தகராறு செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து அவர்கள் அந்த மாணவனை தாக்கியம் இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை 4ம் ஆண்டு மாணவர்கள் 2 பேர் உள்பட 3வதாக ஒரு டி-கடையில் வேலை செய்யும் நபர் ஒருவரும் செய்துள்ளனர். இவர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவன் தனது தந்தையுடன் சூலூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

தற்போது அந்த 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.