கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறுகிறது.  

 

 

ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

 

இதையொட்டி கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும், மாபெரும் கட்டணமில்லா இருதய ஆலோசனை, பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம், செப்டம்பர் 29-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள திருமதி வேலுமணியம்மாள் நினைவு அரங்கில் நடைபெறுகிறது.

 

 

 

இருதய நோய் சிறப்பு மருத்துவர்கள் எஸ்.மனோகரன், எஸ்.பாலாஜி, டி.ஏ. மாதேஸ்வரன், டி.ஆர்.நந்தகுமார், எஸ்.தேவபிரசாத் குழந்தைகளுக்கான இருதய நோய் சிறப்பு மருத்துவர் மற்றும் இதய மின் இயற்பியல் மருத்துவர் ஆர்.விக்ரம் விக்னேஷ், இருதய நோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆர்.தியாகராஜ மூர்த்தி, குழந்தைகளுக்கான இருதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் விஜய் சதாசிவம் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் இம்முகாமில் பங்கேற்கின்றனர்.

 

 

 

அதில் இருதய நோய் சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனை, இதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனை, இலவச இ.சி.ஜி. பரிசோதனை, தேவைப்படுவோருக்கு இலவச எக்கோ பரிசோதனை, 25 சதவீத கட்டணச் சலுகையில் டி.எம்.டி., ரத்த சர்க்கரை மற்றும் உப்பின் அளவு, கிரியேட்டினின், கொழுப்பு அளவு கண்டறிதல், குழந்தைகளுக்கான இருதய பரிசோதனை, தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவச எக்கோ பரிசோதனை ஆகியவை செய்யப்படும்.

 

 

 

உயர் ரத்த அழுத்தம், தோள்பட்டை வலியுடன் கூடிய நெஞ்சு வலி உள்ளவர்கள், மூச்சுத் திணறல் மற்றும் படபடப்பு உள்ளவர்கள், வாயுத் தொல்லை உள்ளவர்கள், ஓடும் போதும், படி ஏறும் போதும் படபடப்பு, நெஞ்சு வலி உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். அப்போது இருதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையில் 10 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்படும். 

 

 

இச்சலுகை செப்டம்பர் 29-ம் தேதி மட்டுமே. முகாமில் கலந்து கொள்ள வரும் நோயாளிகள் தங்களுடைய மருத்துவக் குறிப்புகள், மருந்து சீட்டுகள், காப்பீட்டு அட்டை ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். 

 

 

 முன்னதாக 95009-71605 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

 

 

இத்தகவலை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.