கோவையில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் தூக்கி வீசப்பட்ட முதியவர்
- by CC Web Desk
- Jun 06,2025
Coimbatore
கோவை மாவட்டம் அன்னூர் சக்தி சாலையில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்த முதியவர் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சமபவத்தில் முதியவர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
அன்னூர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது அன்னூர் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக சென்ற இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து சாலை கடக்க முயன்ற முதியவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.அக்கம் பக்கத்தினர் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.