துடியலூரில் பில்லூர் - 3ம் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

 

இதனால் அங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி ,துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் கனரக வாகனங்கள், வெள்ளக்கிணறு பிரிவு வழியாகவும், அதே போல சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் கனரக வாகனங்கள் வெள்ளக்கிணறு பிரிவு வழியாகவும் சென்று, மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டும்.