கோவையில் வரும் நாட்களுக்கான வானிலை எப்படி? எப்போ தான் மழைக்கு வாய்ப்பு? வந்தாச்சு வெதர் மேன் அப்டேட்
- by David
- Apr 01,2024
கோவையில் தற்போது வெப்பம் எகிறி அடித்துக்கொண்டிருக்கிறது. வறண்ட வானிலை நாள் முழுவதும் நிலவுவதால், இயல்பான பணிகள் செய்தால் கூட உடல்சோர்வு நிலை பலருக்கும் ஏற்படுகிறது. எல்லோரின் ஆர்வமும் கோடை மழை, பருவமழை மீது தான்.
இந்நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என கோவை 'வெதர் மேன்' சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
வால்பாறை, இடுக்கி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் அடுத்த 10 நாட்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை சூழலுக்கு வாய்ப்புள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான நீலகிரி, சிறுவாணி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவை உள்ளிட்ட கொங்குப் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 10 முதல் 17 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை எனவும் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பாதியில் தான் அதற்கான முன்னேற்றங்கள் ஏற்படும் எனவும் ஏப்ரல் இறுதி வாரத்தில் பரவலான கனமழை பெய்ய நல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
நல்ல மழை என்பது மே மாதத்தில் துவங்கும் எனவும் 2024 தென்மேற்கு பருவமழை போதுமானதை விட நல்ல மழையை தரும் எனவும் கூறினார்.