10.1கிலோமீட்டர் கொண்ட கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோவைக்கு புது வரவாக அமைந்துள்ள இந்த மேம்பாலத்தில் வாகனஓட்டிகள், குறிப்பாக இளைஞர்கள் இரவு நேரங்களில் சென்று புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுக்க விரும்புகின்றனர். இதனால் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நேற்று இரவு 9 மணிக்கு மேம்பாலம் தடுப்புகள் கொண்டு காவல் துறையால் மூடப்பட்டது. இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பாதுகாப்பு காரணத்திற்காக 1 வார காலம் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரியவருகிறது.