மீண்டும் கோவையில் சர்க்கஸ் ! எங்கே? எப்போது வரை? இதோ தகவல்
- by David
- May 19,2025
Coimbatore
கோடை விடுமுறை நாட்கள் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவையில் தற்போது புதுவிதமான சர்க்கஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது.
முதல் முறையாக கோவையில் புனே-வை சேர்ந்த ஒலிம்பியன் சர்க்கஸ் தனது நிகழ்ச்சியை ஆர்.எஸ்.புரம் பரியல் கிரவுண்டில் நடத்துகிறது. தினமும் மாலை 4.30 மற்றும் 7.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் மணிப்பூர் மற்றும் மெக்சிகோ-வை சேர்ந்த கலைஞர்கள் பல்வேறு புதுவகை சர்க்கஸ் சாகசங்களை செய்து அசத்துகின்றனர். ரூ.200ல் இருந்து நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் ஒரு ஷோ நிகழும். இம்மாதம் இறுதி வரை நிகழ்ச்சி நடைபெறும் என தெரியவருகிறது.
மேலும் தகவலுக்கு புக்-மை-ஷோ செயலியை பார்க்கவும்.