கோவை, ஹைதராபாத் இடையே இண்டிகோ நிறுவனம் வழங்கும் தினசரி 5 விமான சேவைகள் 4 ஆக குறைக்கப்பட வாய்ப்பு!
- by CC Web Desk
- May 22,2025
கோவை சிட்ரா பகுதியில் கோவை சர்வதேச விமான நிலையம் அமைந்து உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், அபு தாபி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு பகுதிகளுக்கும் பல்வேறு விமான சேவை நிறுவனங்களால் விமான சேவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை, ஹைதராபாத் நகரங்கள் இடையே இண்டிகோ நிறுவனத்தால் தினசரி 5 சேவைகள் வழங்கப்படுவது, வரும் 1 ஜூலை முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை 4 ஆக குறைக்கப்படும் என தெரியவருகிறது.
இந்த நடவடிக்கை அமலுக்கு வரும் நாட்களில், தினமும் ஹைதராபாத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 11.05 மணிக்கு வரும் விமானமும், கோவையில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு ஹைதராபாத் நகருக்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தடையும் விமானமும் ரத்தாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. அதை பொறுத்து மாற்றங்கள் உறுதியாகும்.