நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவை புரோசோன் மால் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ், பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

நிகழ்வில் பேசிய நடிகர் பார்த்திபன், தனுஷ் ஒரு சிறந்த இயக்குநர் என்று பாராட்டினார். நடிகர் சத்யராஜ் கொங்கு தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

 

நடிகர் தனுஷ் பேசுகையில், "எண்ணம் போலத்தான் வாழ்க்கை. இளைஞர்கள் என்ன சாதிக்க விரும்புகிறோமோ அதை நம்ப வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்" என்று கூறினார். மேலும், "காலை 8 மணிக்கு வரும் விமர்சனங்களை நம்பாதீர்கள், மதியம் 12 மணிக்குத்தான் நிலைமை தெரியும். சினிமாவிற்கு இது மிகவும் தேவை. அனைவரின் படமும் ஓட வேண்டும்" என்று தெரிவித்தார்.

 

இறுதியாக, ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, 'வடசென்னை 2' திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவித்தார்.