கோவை வட்டமலைப்பாளையத்தில் உள்ள எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை கீழே இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா அட்வான்ஸ் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் (SRATI) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) இணைந்து 3 மாதம் வெல்டிங் பயிற்சியை வருகின்ற டிசம்பர் 18 ஆம் தேதி 100% எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் வழங்குகிறது.

மேலும் பயிற்சி பெறும் வெளியூர் மாணவர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். உள்ளூர் மாணவர்களுக்கு பயிற்சியின் முடிவில் ரூ.7500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

மூன்று மாத பயிற்சிக்கு பிறகு முன்னணி நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் 100% அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என் கே.ஆர்.பிரசாத்- இயக்குனர் (SRATI) தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு : 9600422851/7373728566