2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத விலையில் தங்கம் தற்போது விற்பனையாகி வருகிறது.

கடந்த ஒரு சில தினங்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,715க்கும் ஒரு பவுன் ரூ.53,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.66ம் பவுனுக்கு ரூ.528ம் விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.5,501க்கும் ஒரு பவுன் ரூ.44,004க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு 50 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000க்கும் விற்பனையாகிறது.