கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 1 மணி நேரத்திற்கும் மேல் மாநகரின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. 

 

மழை பெய்வதால் வெப்பம் தணிந்தது பணிக்காக வெளியே செல்லும் குடும்ப தலைவர்களுக்கு, இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், மழையால் காய் கறி விலை உயர துவக்கியுள்ளது இல்லத்தரசிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

நேற்று ரூ.70க்கு விற்பனையான 1 கிலோ காரட், இன்று (13.5.24)ரூ.20 உயர்ந்து ரூ.90க்கு விற்பனை ஆகிறது. பீன்ஸ் நேற்று ரூ.150 இன்று ரூ.190, பாகற்காய் நேற்று ரூ. 75 இன்று ரூ. 90, வெண்டை நேற்று ரூ.50, இன்று ரூ.60, கத்திரிக்காய் நேற்று ரூ.30 இன்று ரூ.40. உருளைக்கிழங்கு (ஊட்டி) இப்போது 1 கிலோ ரூ.80.

 

 

மழை இதேபோல 2 நாட்கள் பெய்தாலே, இந்த காய்கறிகளுடன் தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலையும் உயரும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.