குனியமுத்தூர் பகுதியில், பாலக்காடு இரயில்வே பாதைக்கு மேலேயும், பொள்ளாச்சி இரயில்வே பாதைக்கு அடியிலும் பாலம் அமைத்து கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான குறிச்சி குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்த பணியை இன்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் சேலம் இரயில்வே கோட்ட முதன்மை பொறியாளர் ஹிரிதியேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்.

முன்னதாக கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கே.கே.நகர் வார்டு எண் 29க்குட்பட்ட கணபதி, காந்தி நகர், கட்டபொம்மன் வீதி ஆகிய பகுதிகளில்  பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகனை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வின் பின்னர் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து லங்கா கார்னர் பகுதியில் சாலையின் குறுக்கே வடிகால் அமைப்பது தொடர்பாகவும் மற்றும் கிக்கானி பள்ளி அருகில் இரயில்வே பாதை அடிப்பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாகவும் நடைபெறும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.