குமரகுரு பொறியியல் கல்லூரியின் 37ம் பட்டமளிப்பு விழா ஏப்ரல் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு குமரகுரு நிறுவனங்களின் பிரசிடெண்ட் சங்கர் வாணவராயர் தலைமை தாங்கினார்.

இவ்விழாவின் 2ம் நாளில், காலையில் குமரகுரு பொறியியல் கல்லூரி மற்றும் அதன் கீழ் வரக்கூடிய குமரகுரு வணிகப் பள்ளி (KCTBS) மாணவர்களும் பட்டங்களை பெற்றனர். இதே நாளில் மதியம் நடைபெற்ற குமரகுரு பன்முக கலை  அறிவியல் கல்லூரியின் (KCLAS) பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 405 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

காலை நடைபெற்ற நிகழ்வில் குமரகுரு பொறியியல் கல்லூரியின் முதல்வர் அணில் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மீரான் குழுமத்தின் தலைவர் நவாஸ் மீரான் கலந்து கொண்டார். "இன்று போட்டி நிரம்பிய உலகில் தோல்விகளை ஏற்றுக் கொண்டு பயணிக்க வேண்டும்" என்று அவர் கருத்து தெரிவித்தார். பட்டதாரிகளின் எதிர்கால பயணத்தில் தொழில்நுட்பம். தன்னம்பிக்கை மற்றும் தொடர்ந்த கல்வியின் அவசியத்தை அவர் பேசுகையில் எடுத்துரைத்தார். 

மதியம் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியின் (KCLAS) பட்டமளிப்பு விழாவில், கல்லூரி முதல்வர் தீபேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்வுக்கு முன்னாள் இந்திய வெளியுறவுத் துறைத் தூதர் பங்கஜ் சரண், பட்டம் பெற்ற மாணவர்களை, தைரியம், நேர்மையும் மற்றும் இரக்கத்தோடும் எதிர்காலத்தை எதிர்கொள்ள ஊக்கமூட்டினார்.