பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி, கோவை மாவட்ட திமுக வினர் வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி, வினோதமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

 

கோவை கருமத்தம்பட்டி நால் ரோட்டில் திமுகவினர் பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பொதுமக்களுக்கு உளுந்து வடை சுட்டு வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர். மோடி சுட்ட வடைகள் என சில திட்டங்களை காகிதத்தில் அச்சிட்டு அதில் வடையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.