கோவை மாவட்டத்தில் உள்ள 'நாச்சிமுத்து இன்டஸ்ட்ரியல் அசோசியேசன்' (என்.ஐ.ஏ/NIA) நிறுவனங்களின் புதிய செயலராக டாக்டர் எஸ்.வி. சுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

என்.ஐ.ஏ. நிறுவனங்களின் கீழ் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, வாணவராயர் வேளாண்மைக் கல்லூரி, மாரியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருமதி ருக்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி, பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ குப்பாண்டக் கவுண்டர் தொடக்கப்பள்ளி, ஸ்ரீ குப்பாண்டக் கவுண்டர் மழலையர் தொடக்கப் பள்ளி, மிராக்கிள் ஒருங்கிணைந்த மருத்துவ மையம், என்.ஐ.ஏ. சக்தி புறா, என்.ஐ.ஏ. திறன்மேம்பாட்டு நிறுவனம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் இன்டஸ்ட்ரியல் அசோசியேசன் (என்.ஐ.ஏ.) மொழிபெயர்ப்பு மையம் ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றன.

இந்நிறுவனங்களின் செயலராக டாக்டர் எஸ்.வி. சுப்பிரமணியன் பொருப்புவகிப்பார். இவர் மனித வள மேம்பாட்டுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். டி.வி.எஸ், கீர்த்திலால் ஜூவல்லர்ஸ், ஏ.பி.டி. ஆகிய நிறுவனங்களில் பல உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக என்.ஐ.ஏ. நிறுவனங்களின் முதன்மை மனிதவள மேம்பாட்டு அலுவலராகவும், இணைச் செயலராகவும் பணியாற்றி வந்தார்.

இவரது வழிகாட்டுதலின் கீழ், Great Place to Work என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய அளவில் சிறந்த பணி செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் என்.ஐ.ஏ. நிறுவனங்கள் இந்த ஆண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

இவரது தலைமையின் கீழ் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் மைக்ரோசாப்ட் (வருடம் ரூ.51 இலட்சம்), அமேசான் (வருடம் ரூ.47 இலட்சம்), ஜஸ்பே (வருடம் ரூ.27 இலட்சம்) போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவு ஊதியத்தில் பணியாணை பெற்றுள்ளனர்.

சக்தி குழுமங்களின் தலைவரும், என்.ஐ.ஏ. நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் ம.மாணிக்கம் அவர்களும், தளாளர் மா.ஹரிஹரசுதன் அவர்களும், டாக்டர் எஸ்.வி. சுப்பிரமணியன் அவர்களின் பணிகளைப் பாராட்டும் விதமாக என்.ஐ.ஏ. நிறுவனங்களின் செயலராகப் பதவி உயர்வு அளித்து கௌரவித்தனர்.

அதற்குரிய பதவி உயர்வு ஆணையை கோவை சக்தி நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் வழங்கி, வாழ்த்துகள் கூறினர். என்.ஐ.ஏ. நிறுவனங்களின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ஆர். கார்த்திகேயன் அவர்களும் உடனிருந்து வாழ்த்துகள் தெரிவித்தார்.