கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

கடந்த செவ்வாய் அன்று  நடைபெறவிருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நிர்வாக காரணத்தால் நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை காலை 11.00 மணி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயரிடம் பொதுமக்கள் வழங்கலாம்.