நீலகிரியில் துவங்கியது கோடை விழா 2025 ...13வது காய்கறி கண்காட்சி ஆரம்பம்
- by David
- May 03,2025
2025ம் ஆண்டுக்கான நீலகிரி கோடை திருவிழா இன்று (3.5.25) துவங்கியது. முதலாவதாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை விழாவை முன்னிட்டு 13வது காய்கறி கண்காட்சி இன்று ஆரம்பமானது.
நேரு பூங்காவில் 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் 2.50 டன் காய்கறிகளை கொண்டு பல்வேறு பறவைகள், விலங்குகள் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோடை விழா ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் காய்கறி கண்காட்சிக்கு அடுத்ததாக கூடலூரில் மே 9 முதல் 11 வரை 11வது வாசனை திரவிய கண்காட்சி; ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10 முதல் 12 வரை 20வது ரோஜா கண்காட்சி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே 16 முதல் 21 வரை 127வது மலர் கண்காட்சி; குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 23 முதல் 25 வரை 65வது பழக்கண்காட்சி; குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல்முறையாக மே 30 முதல் ஜூன் 1 வரை 3 நாட்கள் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.