கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் 26 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.


ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் நடைபெறும் இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்து பார்வையிட்டார்.


2023-24 கல்வியாண்டில் 8ம் வகுப்பு 9ம் வகுப்பு பயிலும் அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சி முகாமில் பானை ஓவியம், மணல் சிற்பம், காகித வேலைப்பாடுகள், களிமண் சிற்பம், மெழுகு சிற்பம் போன்ற பல்வேறு வகையான கலைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. 


இந்த தொடக்க நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, கல்வி குழு தலைவர் மாலதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.