நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோஜன் மாலில் வெளியாகிறது. இதற்காக நாளை நடிகர்கள் தனுஷ், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் நித்யா மேனன் கோவை வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பவர் பாண்டி', 'ராயன்', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் தனுஷ் இயக்கிய 4வது திரைப்படமான இட்லி கடை, அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது.