கோவை இக்கரை போளுவாம்பட்டியில் 2.63 ஏக்கரில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டதை எதிர்த்து அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தகன மேடைக்கான அனுமதிகளை ரத்து செய்யக்கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஈஷா எரிவாயு தகன மேடை அனைத்து அனுமதிகளை பெறப்பட்டு கட்டப்பட்டுள்ளது எனவும் இந்த தகன மேடைக்கு சட்டப்படி அனுமதிகள் வழங்கப்பட்டதாக கோவை ஆட்சியர் பவன்குமார் கூறியுள்ளார்.

மேலும் எரிவாயு தகன மேடையை கட்டிய பிறகு தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோவை ஆட்சியர் தரப்பில் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.