கோவை வ.உ.சி மைதானத்தில் துவங்கியது சர்க்கஸ்
- by CC Web Desk
- Jun 28,2025
Coimbatore
ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை கோவை வ.உ.சி மைதானத்தில் ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த 35 நாட்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சாகசங்களை சர்க்கஸ் கலைஞர்கள் செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்துள்ளனர். இதில் தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மொத்தம் மூன்று காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த காட்சிகளுக்கான கட்டணம், ரூ.150, ரூ.250, ரூ.350, ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கக்கூடிய, அமெரிக்கன் ரிங் ஆப் டெத், குளோப் மோட்டார் சைக்கிள், ரஷியன் ஸ்டிக் பேலன்ஸ், ஸ்பிரிங் நெட், ஸ்விங்கிங் அக்ரோபேட், ரஷியன் ரோப் பேலன்ஸ் சைக்கிள் அக்ரோபாட்டிக்ஸ் ஆக்ட் போன்ற ஏராளமான சாகசங்கள் இதில் இடம்பெறுகின்றன.