சொகுசு கார்களில் மாஸ் காட்டுவது கோவையா? சென்னையா? வெளியானது தகவல்!
- by David
- Jul 29,2024
2023-24 ஆண்டுகாலத்தில் மட்டும் கோவை மண்டலத்தில் 510 சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த காலத்தில், கோவை மண்டலத்தில், 1 லம்போர்கினி (Lamborghini), 20 போர்ஷா (Porsche), 21 அவ்டி (Audi), 37 ஜாகுவார் லாண்ட் ரோவர் (Jaguar Land Rover), 203 பென்ஸ் (Mercedes Benz) மற்றும் 228 பி.எம்.டபிள்யு (BMW) பதிவாகியுள்ளது.
ஆனால் இதே காலகட்டத்தில் சென்னையில் 4 ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), 7 பென்ட்லி (Bentley), 1 ஆஸ்டன் மார்டின் (Aston Martin), 1 ஃபெராரி (Ferrari), 5 லம்போர்கினி (Lamborghini), 48 போர்ஷா (Porsche), 144 ஜாகுவார் லாண்ட் ரோவர் (Jaguar Land Rover), 34 அவ்டி (Audi), 706 பென்ஸ் (Mercedes Benz) மற்றும் 715 பி.எம்.டபிள்யு (BMW) என மொத்தம் 1668 சொகுசு கார்கள் பதிவாகியுள்ளது.
2022 முதல் 2023 காலகட்டத்தில் கோவை மண்டலத்தில் மொத்தம் 424 ஆடம்பர சொகுசு கார்களும், சென்னை மண்டலத்தில் 1444 ஆடம்பர கார்கள் சென்னை மண்டலத்தில் பதிவானது குறிப்பிடத்தக்கது.