கோவை மாவட்டத்தின் புது வருவாய்த்துறை அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றார் டாக்டர் ஷர்மிளா.

 

இன்று இவர் வெளியிட்ட ஒரு பொது அறிவிப்பில் சுமார் 700 பேர் மகிழும்படியான ஒரு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார்.

 

அந்த செய்தி குறிப்பில் அவர் கூறியிருந்ததாவது:-

 

 

கோவை மாவட்டம் 100 அடி சாலையில் இயங்கி வந்த ஸ்ரீநிவாச பெருமாள் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ரங்கே கவுண்டர் வீதியில் இயங்கி வந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பண்ட்ஸ் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து தொகை திரும்ப பெறாத சுமார் 700 முதலீட்டாளர்களுக்கு 'மாண்பமை கோயம்புத்தூர் டான்பிட் சிறப்பு நீதிமன்றம்' வழங்கியுள்ள உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலரால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதலீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது.

 

எனவே முதலீட்டாளர்கள் தங்களது தொகையினை பெறுவதற்கு டெபாசிட் ரசீது, ஆதார்/வாக்காளர் அட்டை புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல் ஆவணங்களை கோயம்புத்தூர் பொருளாதார குற்றப்பிரிவு, காவல் துறை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.