64 ஆக அதிகரித்தது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு!
- by David
- Jun 27,2024
Tamil Nadu
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 4 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக இருந்தது.
இன்று புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் பலியானதை தொடர்ந்து, இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.