54 ஆக அதிகரித்தது கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு!
- by David
- Jun 22,2024
Tamil Nadu
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் பரமசிவம், கல்யாணசுந்தரம் ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கள்ளச்சாராயம் குடித்து இறந்த 54 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.