கோவை எல் & டி பைபாஸ் சாலையை பராமரிக்க டெண்டர் கோரியது நெடுஞ்சாலை ஆணையம், விரிவாக்கத்திற்கும் தயாராகிறது திட்ட அறிக்கை
- by David
- May 06,2025
கோவை நீலம்பூர் - மதுக்கரை இடையே எல் & டி நிறுவனத்தால் கட்டப்பட்ட 28 கிலோமீட்டர் புறவழி சாலையை பராமரிக்கும் பொறுப்பு அந்த நிறுவனத்திடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் சென்றது.
இதற்காக ரூ.199 கோடி அந்த நிறுவனத்திற்கு அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 ஆண்டு காலத்திற்கு இந்த புறவழிசாலையின் இயக்கம் மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.5.57 கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரியுள்ளது.
2 வழி சாலையாக உள்ள இந்த புறவழிசாலையில் பல ஆண்டுகளாக சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதால், இந்த சாலையை 4 அல்லது 6 வழிசலையாக அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், விரிவாக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுவும் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்படும் என தெரியவருகிறது.
தற்போது புறவழி சாலையின் பராமரிப்பு பணிக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்பட்டாலும் வேகமாக விரிவாக்கம் துவங்கப்படுவதே சிறந்த தீர்வாக இருக்கும் என பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.